ADDED : ஏப் 22, 2024 12:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெள்ளகோவில்;வெள்ளகோவில், முத்துார், காங்கயம், புதுப்பை பகுதிகளில் செடி முருங்கை, மர முருங்கை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.
இவற்றை வெள்ளகோவிலில் இயங்கும் முருங்கைகாய் கொள்முதல் நிலையத்துக்கு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். பல இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
நேற்று, ஏழு டன் விற்பனைக்காக வந்தது. மர முருங்கை கிலோ 10 ரூபாய், செடி முருங்கை 10 ரூபாய், கரும்பு முருங்கை 17 ரூபாய்க்கும் விற்றது.

