/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புதியன கற்று செயல்படுத்தினால் சாதனையாளர்
/
புதியன கற்று செயல்படுத்தினால் சாதனையாளர்
ADDED : ஏப் 01, 2024 12:07 AM

'பொறியியல் படிப்புக்கான எதிர்காலம்' குறித்து அமிர்தா விஷ்வ வித்யாபீடம் ஆட்டோமேஷன் துறைத்தலைவர் ரமேஷ்குமார் பேசியதாவது:
புதிதாக ஏதேனும் கற்றுக்கொள்ளவும், அதை செயல்படுத்தவும் முக்கியத்துவம் தருபவர்கள் எந்த துறையிலும் சாதிப்பவர்களாக மாறி விடுகின்றனர்.
மத்திய அரசின் ரோபோடிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் சார்ந்த தேசிய கொள்கையின் படி, உற்பத்தி, மருத்துவம், வேளாண்மை, நாட்டின் பாதுகாப்பு ஆகிய நான்கு பிரிவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
இதை மையமாக கொண்டு, அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இப்படிப்புகளை தேர்வு செய்து படித்தால், சிறப்பான தொழில் மற்றும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.விரைவில், மனிதர்களுக்கு இணையாக மனித வடிவில் உள்ள ரோபோக்களும் வரும்.
தொழில்நுட்ப உலகில், கல்வி, மருத்துவம், தொழில், பாதுகாப்பு என அனைத்து துறைகளிலும் ஆட்டோமேஷன் தவிர்க்க இயலாததாக இருக்கும்.
ஆட்டோமேஷன் மற்றும் ரோபோடிக்ஸ் துறையில், பெரிய அளவில் வேலைவாய்ப்புகள் வரும் ஆண்டுகளில் உருவாகும்.
கடின உழைப்பு உள்ளவர்கள் இன்ஜி., துறையில் முன்னேறி வருகின்றனர். சிவில் டிப்ளமோ படித்தவருக்கு, லடாக்கில் கூட வேலைவாய்ப்பு கிடைக்கிறது. உலகை கட்டமைக்க கூடியவர்களாக இன்ஜினியர்கள் உள்ளனர்.
அப்துல்கலாம் கூறியது போல், அனைவரும் கனவு காண வேண்டும்; அந்த கனவை நனவாக்க பாடுபட வேண்டும். அதுவே, பெற்றோருக்கு நாம் தரும் பரிசு, வெற்றியாக அமையும்.

