/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சர்வதேச வர்த்தகரை கண்டறிவது எப்படி? ஏற்றுமதியாளர் பயிலரங்கில் விளக்கம்
/
சர்வதேச வர்த்தகரை கண்டறிவது எப்படி? ஏற்றுமதியாளர் பயிலரங்கில் விளக்கம்
சர்வதேச வர்த்தகரை கண்டறிவது எப்படி? ஏற்றுமதியாளர் பயிலரங்கில் விளக்கம்
சர்வதேச வர்த்தகரை கண்டறிவது எப்படி? ஏற்றுமதியாளர் பயிலரங்கில் விளக்கம்
ADDED : மே 15, 2024 12:44 AM

திருப்பூர்:சர்வதேச வர்த்தகர்களின் உண்மை தன்மையை, இறக்குமதி நாடுகள் வாயிலாகவே உறுதி செய்துகொள்ள வேண்டுமென, திருமுருகன்பூண்டியில் நடந்த பயிலரங்கில் அறிவுறுத்தப்பட்டது.
இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு (பியோ), பின்னலாடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) சார்பில், ஏற்றுமதி மேம்பாட்டு பயிலரங்கு திருமுருகன்பூண்டி பாப்பீஸ் ஓட்டலில் நேற்று நடந்தது. 'பியோ' கோவை பிரிவு தலைவர் சாமிநாதன் வரவேற்றார். சர்வதேச ஏற்றுமதி வர்த்தகத்தில், 'பியோ' பங்களிப்பு குறித்து விளக்கினர்.
வெளிநாட்டு வர்த்தகப்பிரிவின் துணை பொது இயக்குனர் ஆனந்த் மோகன் மிஸ்ரா, ஏற்றுமதி மேம்பாட்டு திட்டங்கள் குறித்தும், வெளிநாட்டு வர்த்தக நடைமுறைகள் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கான வழிமுறைகள் குறித்தும் பேசினார்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள்துறை நிர்வாகி சிவராமன், பேசுகையில், ''ஏற்றுமதி வர்த்தகம் சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் நடக்க வேண்டுமெனில், ஒப்பந்தம் செய்யும் வர்த்தகர் மிகச்சரியான நபராக இருக்க வேண்டும்.
ஆர்டர் கிடைக்கும்போது, அவசரப்பட்டு ஒப்பந்தம் செய்யக்கூடாது. பல்வேறு முறைகேடுகளும், மோசடிகளும் நடந்து வருகின்றன. சர்வதேச வர்த்தகர்களின் உண்மை தன்மையை, இறக்குமதி நாடுகள் வாயிலாகவே உறுதி செய்துகொள்ள வேண்டும். எனவே, மிகச்சரியான வர்த்தகர்களை கண்டறிந்து, வர்த்தகம் செய்ய வேண்டும்,'' என்றார்.
ஏற்றுமதி காப்பீடு கழக (இ.சி.ஜி.சி.,) பிரதிநிதி ஆதித்யா கவுசிக், ஏற்றுமதி காப்பீடு திட்டங்கள் மற்றும் அதன் பாதுகாப்புகள் குறித்து விவரித்தார். 'பாங்க் ஆப் பரோடா' வங்கியின் தலைமை மேலாளர் சசிகுமார், ஏற்றுமதியாளர்களுக்கான வங்கி கடன் திட்டங்கள் குறித்து பேசினார்.
திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள், இளம் தொழில் முனைவோர், வெளிநாட்டு வர்த்தகம் தொடர்பான சந்தேகங்களுக்கு தெளிவு பெற்றனர்.

