/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கால்நடைகளுடன் சென்று பா.ஜ.,வினர் ஓட்டு சேகரிப்பு
/
கால்நடைகளுடன் சென்று பா.ஜ.,வினர் ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 13, 2024 11:49 PM

திருப்பூர்;தேர்தல் என்றாலே, அரசியல் கட்சியினரின் நுாதன பிரசாரங்களுக்கு பஞ்சம் இருக்காது. மக்களை ஈர்க்க, அன்றாடம் விதம் விதமாக ஓட்டு சேகரிப்பில் ஈடுபடுகின்றனர். அவ்வகையில், கோவை லோக்சபா தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக பல்லடம் தொகுதியில் தீவிர பிரசாரம் செய்கின்றனர்.
நேற்று காலை வீரபாண்டி மண்டலம் சார்பில், கோவில் வழி பகுதியில் உள்ள விவசாயிகள், கால்நடை வளர்ப்போர், கட்டுமான தொழிலாளர்கள் இணைந்து, அண்ணாமலைக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனர். விவசாயிகள் பலரும் தங்களது ஆடு, மாடு, பால் கேன்களுடன் சென்று ஓட்டு சேகரித்தனர்.
வடக்கு மாவட்ட துணை தலைவர் பாலு, வீரபாண்டி மண்டலம் தலைவர் மகேஷ், இளைஞரணி மாவட்ட தலைவர் தினேஷ், மாவட்ட பொது செயலாளர் நவீன் உள்பட பலர் பங்கேற்றனர்.

