/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மோடியின் பார்வையில் திருப்பூர் தொகுதி: பா.ஜ., வேட்பாளர் முருகானந்தம் பிரசாரம்

ADDED : ஏப் 16, 2024 12:32 AM

திருப்பூர்;திருப்பூர் பா.ஜ., வேட்பாளர் முருகானந்தம் நேற்று திருப்பூர் வடக்கு சட்டசபை தொகுதியில் தண்ணீர் பந்தல் காலனி பஸ் ஸ்டாப்பில் பிரசாரத்தை துவக்கினார். அங்குள்ள ஸ்ரீ கணபதி கன்னிமார் கோவிலில் சாமி தரிசனத்தை செய்தார். கட்சியில் இணைந்தவர்களுக்கு உறுப்பினர் கார்டு வழங்கினார்.
அனுப்பர்பாளையத்தில் உள்ள பாத்திரப்பட்டறைகளுக்கு சென்று உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளரிடம் ஓட்டு சேகரித்தார். சாமி சிலைகள் மற்றும் பாத்திரங்கள் செய்யும் இடங்களுக்கு சென்று, அதன் உருவாக்கம் குறித்து விபரங்களை கேட்டறிந்து, இத்தொழிலில் வளர்ச்சி பெற சிறப்பு திட்டங்கள் கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, காவிலிபாளையம், சிவன் தியேட் டர், எஸ்.ஏ.பி., தியேட்டர், இந்திரா நகர் பகுதிகளில் மக்கள் உற்சாகமாக வரவேற்று, மலர் துாவியும் ஆரத்தி எடுத்தனர்.
மக்கள் மத்தியில் பேசிய போது, ''பிரதமர் மோடியால் நேரடியாக களமிறக்கப்பட்டுள்ளேன். உங்களுக்கு திட்டங்களை மோடி அள்ளிக்கொடுப்பார். அவரின் பார்வையில் திருப்பூர் தொகுதி வந்து விட்டது. உங்களின் பிரச்னை, கோரிக்கை போன்றவற்றை தீர்ப்பேன். உங்களின் கஷ்டங்கள் இனி வரும் காலத்தில் இருக்காது. நெசவாளர்களின் துயரம் தீர்க்கப்படும். உங்களுடன் இருப்பேன்'' என்று ஓட்டு சேகரித்தார்.