/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வெள்ளி இழையென நொய்யலில் வெள்ளம்! நல்லம்மன் தடுப்பணையில் கண்கொள்ளா காட்சி
/
வெள்ளி இழையென நொய்யலில் வெள்ளம்! நல்லம்மன் தடுப்பணையில் கண்கொள்ளா காட்சி
வெள்ளி இழையென நொய்யலில் வெள்ளம்! நல்லம்மன் தடுப்பணையில் கண்கொள்ளா காட்சி
வெள்ளி இழையென நொய்யலில் வெள்ளம்! நல்லம்மன் தடுப்பணையில் கண்கொள்ளா காட்சி
ADDED : மே 22, 2024 12:57 AM

திருப்பூர்:நொய்யலில் மிதமான மழை வெள்ளம் செல்வதால், மங்கலம் நல்லம்மன் தடுப்பணையில், வெள்ளியை உருக்கி வார்த்தது போல், தண்ணீர் ஆர்ப்பரித்து சென்று கொண்டிருக்கிறது.
கழிவுநீர் துர்நாற்றம் இல்லை... அப்புறப்படுத்த முடியாத பிளாஸ்டிக் கழிவுகள் இல்லை... அணைக்கு நடுவில் அழகான கோவிலுடன், இன்றும் புனிதமான இடமாகவே பராமரிக்கப்படுகிறது, மங்கலம் நல்லம்மன் தடுப்பணை.
திருப்பூர் பகுதியில் உள்ள நொய்யல் தடுப்பணைகளிலேயே, மிக நீளமான தடுப்பணை இங்கு தான் அமைந்துள்ளது. மெயின் ரோட்டில் இருந்து செல்ல வழி இல்லாததால், மங்கலம் - வடுகன்காளிபாளையம் ரோட்டில் இருந்து, தோட்டங்களை கடந்து செல்லும் பாதையில் சென்றால் மட்டுமே, நல்லம்மன் தடுப்பணையை அடைய முடியும்.
இதனால், ஆள்நடமாட்டம் இல்லாமல், இன்றும் பழமை மாறாத நொய்யல் அணையாக விளங்குகிறது. சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமித்தாலும் கூட, அணைக்கட்டில் கோவில் இருப்பதால், தெய்வாம்சம் பொருந்திய பகுதியென, மக்கள் வணங்கி வருகின்றனர்.
கோடைகால மழை கருணை காட்டியதால், நொய்யலில் அவ்வப்போது மிதமான மழைவெள்ளம் பாய்ந்து வெள்ளியை உருக்கி வார்த்தது போல், மழை வெள்ளம் ஆர்ப்பரித்து சென்று கொண்டிருக்கிறது. சுற்றிலும் பசுமையான தென்னந்தோப்புகள், ஆள்நடமாட்டம் குறைவான இடம், கண்ணுக்கும், காதுகளுக்கும் இனிமையான தண்ணீர் பாய்ந்தோடுகிறது.
வெயில் நேரம் தவிர்த்து, மேகமூட்டமான சூழலில், 'ஜிலுஜிலு' என காற்றடிக்கும் வேளையில், நல்லம்மன் தடுப்பணையை தழுவியபடி தாண்டி, பெரிய கற்களில் விழுந்து தெறித்து, குதித்து ஓடும் நொய்யல் தண்ணீரை ரசிப்பது தனி சுகமே!

