/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒரே நாளில் 4 சுயேச்சை மனு தாக்கல்
/
ஒரே நாளில் 4 சுயேச்சை மனு தாக்கல்
ADDED : மார் 22, 2024 11:16 PM
திருப்பூர்;திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று ஒரே நாளில் சுயேச்சை வேட்பாளர் நான்குபேர் மனுதாக்கல் செய்தனர்.
திருப்பூர் லோக்சபா தொகுதிக்கான வேட்புமனுக்கள், கலெக்டர் அலுவலகம் மற்றும் சப்-கலெக்டர் அலுவலகங்களில் பெறப்படுகிறது. கடந்த, 20ல் வேட்புமனு தாக்கல் துவங்கிய நிலையில், முதல் இரண்டு நாட்களில் ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
மூன்றாவது நாளான நேற்று, கலெக்டர் அலுவலகத்தில், சுயேச்சை வேட்பாளர் நான்குபேர் அடுத்தடுத்து வந்து மனு தாக்கல் செய்தனர். சப்-கலெக்டர் அலுவலகத்தில்,நேற்றும் யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. வேட்புமனுவும் வாங்க செல்லவில்லை.
திருப்பூர், பூலுவப்பட்டியைச் சேர்ந்த 66 வயதான ஆட்டோ டிரைவர் வெங்கடசாமி, மனைவி ராஜேஸ்வரி மற்றும் மூன்றுபேருடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். இவர் ஏற்கனவே, 2016 சட்டசபை தேர்தலில் வடக்கு தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டுள்ளார். தற்போது, லோக்சபா தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார்.
l அந்தியூரைச் சேர்ந்த 61 வயதான ஷேக்தாவுத். டெய்லர் கடை நடத்தி வருகிறார். மூன்று முறை எம்.எல்.ஏ., தேர்தலில் போட்டியிட்டுள்ளார். ஏழாவது முறையாக, எம்.பி., தேர்தலில் போட்டியிட நேற்று மனு தாக்கல் செய்தார்.
l மூன்றாவது நபராக, கராத்தே மாஸ்டர் ரங்கசாமி, வேட்புமனு தாக்கல் செய்தார். மொத்தம் 17 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
l சென்னை தண்டையார் பேட்டையை சேர்ந்தவர், கண்ணன், 38; வழக்கறிஞர். இவர், திருப்பூர் தொகுதியில் போட்டியிட, நேற்று மனுதாக்கல் செய்தார். பவானியைச் சேர்ந்த பத்து வாக்காளர்கள், முன்மொழிந்துள்ளனர்.

