/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஐகேர்' டிஜிட்டல் இணையதளத்தால் ஏற்றுமதியாளர் பயனடைவர்! 'பியோ' தலைவர் சக்திவேல் பாராட்டு
/
'ஐகேர்' டிஜிட்டல் இணையதளத்தால் ஏற்றுமதியாளர் பயனடைவர்! 'பியோ' தலைவர் சக்திவேல் பாராட்டு
'ஐகேர்' டிஜிட்டல் இணையதளத்தால் ஏற்றுமதியாளர் பயனடைவர்! 'பியோ' தலைவர் சக்திவேல் பாராட்டு
'ஐகேர்' டிஜிட்டல் இணையதளத்தால் ஏற்றுமதியாளர் பயனடைவர்! 'பியோ' தலைவர் சக்திவேல் பாராட்டு
ADDED : ஏப் 02, 2024 11:28 PM

திருப்பூர்:''ஐகேர்' டிஜிட்டல் இணையதளம் வாயிலாக, சிரமங்கள் குறையும்; திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் நிச்சயம் பயனடைவர்,'' என, 'பியோ' தலைவர் சக்திவேல் பேசினார்.
தொழிற்சாலைகளுக்கு தர உத்தரவாதம் அளிக்கும் சேவை வழங்கும், 'இன்டர்டெக்' நிறுவனம், 'ஐகேர்' என்ற புதிய டிஜிட்டல் தளத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. துருக்கியில் பயன்பாட்டில் உள்ள இணையதளம், இந்தியாவில் துவக்கப்பட்டது.
இதற்காக, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில், 'பியோ' தலைவர் சக்திவேல், ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் திருக்குமரன் ஆகியோர், குத்துவிளக்கு ஏற்றி, இணையதளத்தை துவக்கி வைத்தனர். 'சாப்ட்லைன்' நிறுவனத்தின் இந்தியாவுக்கான இயக்குனர் மனு கஹ்லோட் வரவேற்றார்.
'பியோ' தலைவர் சக்திவேல் பேசுகையில், ''கடந்த, 25 ஆண்டு களாக, இன்டர்டெக் நிறுவனத்தின் சேவை, திருப்பூர் ஏற்றுமதியாளருக்கு கிடைக்கிறது. 'ஐகேர்' டிஜிட்டல் இணையதளம் வாயிலாக ஏற்றுமதியாளர் நிச்சயம் பயனடைவார்கள்.
இந்தியா, 15 ஆண்டு களாக, வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தியை பின்பற்றி வருகிறது. இன்டர்டெக் நிறுவனம், தனது உலகம் முழுவதும் உள்ள கிளைகள் வாயிலாக, திருப்பூர் ஏற்றுமதியாளர்களின் வளம் குன்றா வளர்ச்சி நிலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.
'இன்டர்டெக்' நிறுவன தெற்காசிய பிராந்திய நிர்வாக இயக்குனர் சந்தீப் தாஸ் பேசுகையில், ''ஐகேர்' மூலமாக, தொழிற்சாலைகள், தங்கள் சோதனை மாதிரிகளை துவக்கம் முதல் இறுதி வரை கண்டறியலாம்; 24 மணி நேரமும் எங்கள் சேவை கிடைக்கும். ஒரு சில 'க்ளிக்' மூலமாக, சந்தையில் முன்னணியில் உள்ள மொத்த தர உத்தரவாத தீர்வுகளை பெறலாம். தரம், பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்யலாம்,'' என்றார்.
புதுமையான தீர்வு
'குளோபல் சாப்ட்லைன்ஸ் மற்றும் ஹார்ட்லைன்ஸ்' மார்க்கெட்டிங் இயக்குனர் ெஷல்லி லோ பேசுகையில், ''ஐகேர்' வாயிலாக, எங்களது வாடிக்கையாளர்களுக்கு அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் புதுமையான தீர்வுகளை வழங்க முடியும். வாடிக்கையாளரின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
2030ல் 'ஜீரோ கார்பன்'
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் பேசுகையில், ''திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள், 'சாம்பிள்' டெஸ்ட் எடுக்கும் சிர மங்களை, 'ஐகேர்' குறைத்து விடும். திருப்பூரை பொறுத்தவரை, 2030ம் ஆண்டுக்குள், 'ஜீரோ கார்பன்' என்ற நிலையை அடையும். எங்களது குறிக்கோள், 'க்ரீன் திருப்பூர்... பிராண்ட் திருப்பூர். 'டாலர் சிட்டி' தொழில் நகரின் கனவு களையும், ஏற்றுமதியாளரின் எதிர்பார்ப்பு களையும், 'இன்டர்டெக் ஐகேர்' பூர்த்தி செய்யும்,'' என்றார்.

