sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கோடையிலும் வீணாகும் குடிநீர்

/

கோடையிலும் வீணாகும் குடிநீர்

கோடையிலும் வீணாகும் குடிநீர்

கோடையிலும் வீணாகும் குடிநீர்


ADDED : ஏப் 02, 2024 11:38 PM

Google News

ADDED : ஏப் 02, 2024 11:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீணாகும் தண்ணீர்

திருப்பூர் பி.எஸ்.என்.எல்., தலைமை அலுவலகம் பின், ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் முன்புறம் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி, சாலை சேறும், சகதியுமாக மாறியுள்ளது.

- கிருஷ்ணதாஸ், குமரன் ரோடு. (படம் உண்டு)

திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, எஸ்.ஆர்.சி., மில் ஸ்டாப்பில், முதல் குடிநீர் திட்ட பிரதான குழாய் உடைந்து, சாலை முழுதும் தண்ணீர் வீணாகிறது.

- தாமோதரசாமி, அணைக்காடு. (படம் உண்டு)

திருப்பூர், 15 வேலம்பாளையம், சொர்ணபுரி அவென்யூ பகுதியில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.

- சுதர்சன் பெரியசாமி, சொர்ணபுரி அவென்யூ. (படம் உண்டு)

குப்பை அள்ளுங்க...

திருப்பூர், நாச்சிபாளையம் ஊராட்சி, புளியாண்டம்பாளையம் செல்லும் வழியில், பொது வெளியில் குப்பைகள் வீசியெறிப்படுகிறது. குப்பை அள்ள வேண்டும்.

- ராஜேந்திரன், நாச்சிபாளையம். (படம் உண்டு)

தெருவிளக்கு எரிவதில்லை

திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, பாளையக்காடு பஸ் ஸ்டாப்பில் தெருவிளக்கு எரிவதில்லை. இருள்சூழ்ந்து காணப்படுகிறது.

- சங்கர்சதீஷ், பாளையக்காடு. (படம் உண்டு)

திருப்பூர், காமராஜர் ரோடு, பூ மார்க்கெட் ரவுண்டானா சந்திப்பில் உயர்கோபுர மின்விளக்கு எரிவதில்லை. ஆறு மாதமாக இதே நிலை உள்ளது. எரியாத விளக்கை மாற்ற வேண்டும்.

- ஜெயப்பிரகாஷ், காமராஜர் ரோடு. (படம் உண்டு)

திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்ட் முன்புறமுள்ள உயர்கோபுர மின்விளக்கு ஒரு வாரமாக எரிவதில்லை.

- ராம்குமார், பி.என்., ரோடு. (படம் உண்டு)

மாநகராட்சி கவனத்துக்கு...

திருப்பூர் மாநகராட்சி இரண்டாவது மண்டல அலுவலகத்தில் ஆர்.ஓ., குடிநீர் கருவி பழுதாகியுள்ளது. மின் இணைப்பு வழங்காமல் அப்படியே வைத்துள்ளனர்.

- அஸ்லாம், கஞ்சம்பாளையம். (படம் உண்டு)

ரியாக் ஷன்

குப்பை அள்ளிட்டாங்க...

திருப்பூர், முத்தணம்பாளையம், பாலாஜிநகர் பகுதியில் குப்பை தேங்கியுள்ளதாக, தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. குப்பையை அள்ளி விட்டனர்.

- இளையராஜா, முத்தணம்பாளையம். (படம் உண்டு)

மாநகராட்சி கவனத்துக்கு...

திருப்பூர் மாநகராட்சி இரண்டாவது மண்டல அலுவலகத்தில் ஆர்.ஓ., குடிநீர் கருவி பழுதாகியுள்ளது. மின் இணைப்பு வழங்காமல் அப்படியே வைத்துள்ளனர்.

அஸ்லாம், கஞ்சம்பாளையம். (படம் உண்டு)






      Dinamalar
      Follow us