/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தி.மு.க., பிரமுகர் வீட்டில் ஐ.டி., ரெய்டு; ரூ.11 லட்சம், ஆவணங்கள் பறிமுதல்
/
தி.மு.க., பிரமுகர் வீட்டில் ஐ.டி., ரெய்டு; ரூ.11 லட்சம், ஆவணங்கள் பறிமுதல்
தி.மு.க., பிரமுகர் வீட்டில் ஐ.டி., ரெய்டு; ரூ.11 லட்சம், ஆவணங்கள் பறிமுதல்
தி.மு.க., பிரமுகர் வீட்டில் ஐ.டி., ரெய்டு; ரூ.11 லட்சம், ஆவணங்கள் பறிமுதல்
ADDED : ஏப் 01, 2024 01:31 AM

திருப்பூர்'பல்லடத்தில், தி.மு.க., பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு, 11 லட்சம் ரூபாய், ஆவணங்கள் சிலவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம், கிடாத்துறையை சேர்ந்தவர் சீனிவாசன், 45; தி.மு.க., பிரமுகர்.தேர்தல் பறக்கும்படையினர் அளித்த தகவலின் படி, நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில் இவரது வீட்டில் கோவையை சேர்ந்த வருமானவரித்துறை உதவி கமிஷனர் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
நள்ளிரவு, 12:00 மணி வரை நடந்த விசாரணைக்கு பின், இவரிடமிருந்து, 11 லட்சம் ரூபாய், ஏழு ஆவணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவரை இன்று ஆஜராகி பணம், ஆவணம் தொடர்பான விளக்கத்தை கொடுக்குமாறு அதிகாரிகள் சம்மன் கொடுத்து சென்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
''சில மாதம் முன்பு சீனிவாசன், அ.தி.மு.க.,வில் இருந்து விலகி தி.மு.க.,வில் சேர்ந்தார். ரியல் எஸ்டேட், மதுக்கடை பார் என, பல தொழில்களை செய்து வருகிறார். ஆளும்கட்சியை சேர்ந்த வி.ஐ.பி.,யுடன் நெருக்கமாக இருந்து வருகிறார். வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக பணம் பதுக்கப்பட்டதாக அதிகாரிகளுக்கு புகார் சென்றது.
இதன் தொடர்ச்சியாக வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்'' என்று போலீசார் தெரிவித்தனர்.
இன்ஜினியரிடம் ரூ.10 லட்சம் பறிமுதல்
ஈரோடு லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட தாராபுரம் சட்டசபை தொகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி வெங்கடேஷ் தலைமையிலான குழுவினர் கொளத்துப்பாளையத்தில் நேற்று வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
அவ்வழியாக வந்த மூலனுாரை சேர்ந்த செந்தமிழ் செல்வன், 27 என்பவரது காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
சிவில் இன்ஜினியரான செந்தமிழ் செல்வன், கட்டுமான பணிக்காக அப்பகுதியில் உள்ள வங்கியில், பத்து லட்சம் ரூபாய் பணத்தை எடுத்தார்.
பணத்தை நேற்று மூலனுாரில் உள்ள கடை ஒன்றில் கட்டுமான பொருட்கள் வாங்க செல்வதாக தெரிவித்தார்.
உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால்பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்தனர்.

