/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மேம்பாலம் பகுதியில் தொடரும் உயிரிழப்பு! தீர்வு காணுமா மாவட்ட நிர்வாகம்
/
மேம்பாலம் பகுதியில் தொடரும் உயிரிழப்பு! தீர்வு காணுமா மாவட்ட நிர்வாகம்
மேம்பாலம் பகுதியில் தொடரும் உயிரிழப்பு! தீர்வு காணுமா மாவட்ட நிர்வாகம்
மேம்பாலம் பகுதியில் தொடரும் உயிரிழப்பு! தீர்வு காணுமா மாவட்ட நிர்வாகம்
ADDED : மே 07, 2024 11:07 PM

உடுமலை;உடுமலை - தளி ரோட்டில், ரயில்வே கடவு எண் 95க்கு பதிலாக நகராட்சி அருகே, 12.70 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் அமைக்க, 2006--07ல் நிதி ஒதுக்கப்பட்டது. நீண்ட இழுபறிக்குப்பிறகு, 2014ல், பாலம் பயன்பாட்டுக்கு வந்தது.
பணிகள் துவங்கிய போது, திட்ட வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்டது. முதலில், 650 மீட்டர் நீளம், 8.50 மீட்டர் அகலம் மற்றும் இரு புறமும் தலா, 5.50 மீட்டர் அகலத்தில் சர்வீஸ் ரோடு, தலா, 1.50 மீட்டர் அகலத்தில் நடைபாதை மற்றும் மழை நீர் வடிகால் கட்ட திட்டமிடப்பட்டது.
ஆனால், ரயில்வே பகுதி மேம்பாலத்தின் உயரம், திட்ட வடிவமைப்பு அளவை விட, 1.5 மீட்டர் உயரம் கூடுதலாக கட்டப்பட்டது. இதனால், பாலத்தின் இருபுறமும் தலா, 50 மீட்டர் என பாலத்தின் நீளம் மொத்தம், 100 மீட்டர் அதிகரித்து நெடுஞ்சாலைத்துறை (திட்டங்கள்) சார்பில் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதில், பாலத்தின் நகராட்சி அலுவலகம் பகுதியிலுள்ள நுழைவு பகுதியில், பாலம் பயன்பாட்டுக்கு வந்தது முதல் போக்குவரத்தில் குழப்பம் நிலவுகிறது.
பாலத்தின் இருபுறங்களிலும் உள்ள சர்வீஸ் ரோடு மட்டுமல்லாது, நகராட்சி ரோட்டில் இருந்து வரும் வாகனங்களும், மேம்பாலத்தில், இணையவும், தளி ரோட்டை கடந்து, காந்திசவுக் சர்வீஸ் ரோட்டுக்கு செல்ல முற்படும் போது, விபத்துகள் ஏற்படுகிறது.
பாலத்திலிருந்து வாகனங்கள் வேகமாக கீழிறங்கும் போது, திடீரென வாகனங்கள் குறுக்கிடுவதால், வேகத்தை கட்டுப்படுத்த முடிவதில்லை; பாலத்திலிருந்து நேராக செல்லாமல், நகராட்சி ரோடு மற்றும் அணுகுசாலைக்கு திரும்பும் போது, பின்னால் வரும் வாகனங்களால், விபத்து ஏற்படுகிறது.
பல ஆண்டுகளாக நீடிக்கும் இப்பிரச்னைக்கு, நிரந்தர தீர்வு காணப்படாமல் உள்ளது. வாகன விபத்துகளால் உயிரிழப்பு ஏற்படும் பகுதிகளை மேம்படுத்த, மாவட்ட நிர்வாகம் தலைமையில், அனைத்து துறை ஆலோசனை கூட்டம் நடத்தி, தீர்வு காணப்படுவது வழக்கம்.
ஆனால், தளி ரோடு பாலம் பிரச்னைக்கு இதுவரை தீர்வு எட்டப்படவில்லை. சர்வீஸ் ரோடு மற்றும் இதர ரோடுகளில் இருந்து வரும் வாகனங்கள், பாலம் அருகில், ரோட்டை கடப்பதை தவிர்க்க சென்டர்மீடியன் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
எனவே, தளி ரோடு மேம்பாலம் பகுதியில் நிலவும் பிரச்னைக்கு, நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, வட்டார போக்குவரத்து, போக்குவரத்து போலீசாரை ஒருங்கிணைத்து, ஆலோசனை நடத்தி நிரந்தர தீர்வு காண மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.

