/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சித்தி விநாயகர் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு
/
சித்தி விநாயகர் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு
ADDED : ஜூலை 22, 2024 09:16 PM
திருப்பூர்:திருப்பூர் சித்தி விநாயகர் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவையொட்டி, 108 சங்கபிஷேகம் நடந்தது.
திருப்பூர் பி.என்., ரோடு மேட்டுப்பாளையம், எஸ்.வி., காலனியில் ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ ஆதிசித்தி விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ மீனாட்சி அம்பிகா சமேதா சுந்தரேஸ்வரர், ஸ்ரீ விஷ்ணு தர்கா, ஸ்ரீ ஸ்வர்ண வராஹீ, ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ மகாவிஷ்ணு, ஸ்ரீ பிரம்மா கோவில் உள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேகம் கடந்த, 10ம் தேதி சிறப்பாக நடந்து முடிந்தது. மறுநாள் முதல் மண்டலபூஜை நடந்தது.
இதன் நிறைவு விழாவையொட்டி, நேற்று 108 சங்கபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் பங்கேற்றனர். ஸ்ரீ சித்தி விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
---
திருப்பூர், எஸ்.வி., காலனியில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் மண்டல பூஜை நிறைவு விழாவில், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த விநாயக பெருமான்.

