/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் ஓட்டு எண்ணிக்கை மையத்தில் கேமரா பதிவு தடைபட்டதால் பரபரப்பு
/
திருப்பூர் ஓட்டு எண்ணிக்கை மையத்தில் கேமரா பதிவு தடைபட்டதால் பரபரப்பு
திருப்பூர் ஓட்டு எண்ணிக்கை மையத்தில் கேமரா பதிவு தடைபட்டதால் பரபரப்பு
திருப்பூர் ஓட்டு எண்ணிக்கை மையத்தில் கேமரா பதிவு தடைபட்டதால் பரபரப்பு
ADDED : ஏப் 22, 2024 01:45 AM

திருப்பூர்;திருப்பூர் லோக்சபா தொகுதியில், ஓட்டுப்பதிவு செய்யப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், திருப்பூர் எல்.ஆர்.ஜி., கல்லுாரியில் வைக்கப்பட்டுள்ளன. லோக்சபா தொகுதியில் இடம்பெற்றுள்ள திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, கோபி, பெருந்துறை, பவானி, அந்தியூர் ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகளுக்கு, தனித்தனி 'ஸ்ட்ராங் ரூம்' அமைத்து, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு 'ஸ்ட்ராங் ரூம்' உள்ளேயும், நாற்புறமும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அத்துடன், நடைபாதை, படிக்கட்டு பகுதிகள், கட்டட பகுதிகள் என, 260 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
போலீஸ் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் கண்காணிக்கும் வகையில், இரண்டு கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளள. ஒவ்வொரு தொகுதிக்கான, 'ஸ்ட்ராங் ரூம்' பதிவு உள்ளிட்ட ஒட்டுமொத்த கேமரா பதிவுகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
நேற்று முன்தினம் நள்ளிரவு கோபி மற்றும் அந்தியூர் சட்டசபை தொகுதிகளுக்கான கண்காணிப்பு கேமராக்கள் திடீரென இயங்கவில்லை; பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டதாக, சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
போலீசார் கூறுகையில், 'இரவில் திடீரென கோபி, அந்தியூர் தொகுதிகளின், கண்காணிப்பு கேமரா பதிவு தடைபட்டது; அடுத்த, 10 நிமிடங்களில் சீராகிவிட்டது. ஆறு சட்டசபை தொகுதிகளின், 'ஸ்ட்ராங் ரூம்'களும், துப்பாக்கி ஏந்திய போலீசாரின், நான்கு அடுக்கு பாதுகாப்பில் உள்ளன,' என்றனர். இந்திய கம்யூ., மாநில குழு உறுப்பினர் ரவி கூறுகையில், ''பாதுகாப்பு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்,'' என்றார்.

