/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூரில் 2வது முறையாக களமிறங்கும் பா.ஜ., : பொது செயலாளர் போட்டியால் சுறுசுறுப்பு
/
திருப்பூரில் 2வது முறையாக களமிறங்கும் பா.ஜ., : பொது செயலாளர் போட்டியால் சுறுசுறுப்பு
திருப்பூரில் 2வது முறையாக களமிறங்கும் பா.ஜ., : பொது செயலாளர் போட்டியால் சுறுசுறுப்பு
திருப்பூரில் 2வது முறையாக களமிறங்கும் பா.ஜ., : பொது செயலாளர் போட்டியால் சுறுசுறுப்பு
ADDED : மார் 22, 2024 11:17 PM
திருப்பூர்:திருப்பூர் தொகுதி உருவான பிறகு, முதல் முறை தனித்து களமிறங்கிய பா.ஜ., இத்தேர்தலில் பலமான கூட்டணியுடன் இரண்டாவது முறையாக களமிறங்கியுள்ளது.
கடந்த, 2009 தேர்தலில் தோற்றுவிக்கப்பட்ட திருப்பூர் லோக்சபா தொகுதி, நான்காவது தேர்தலை சந்திக்கிறது. முதல் தேர்தலில், அ.தி.மு.க., பலமான கூட்டணி அமைத்து களமிறங்கியது. தி.மு.க., - காங்., கூட்டணியும், பா.ஜ., - தே.மு.தி.க., - கொ.ம.தே.க., கட்சிகள், தனித்தும் களமிறங்கின.
முதல்தேர்தலில் பதிவான, ஏழு லட்சத்து, 40 ஆயிரத்து, 857 ஓட்டுக்களில், 11 ஆயிரத்து, 466 ஓட்டுக்களை (1.55 சதவீதம்) பா.ஜ., வேட்பாளர் சிவக்குமார் பெற்றிருந்தார்.
இரண்டாவது தேர்தலில் (2014), அ.தி.மு.க., தனித்து களமிறங்கியது. தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகளுடன் பா.ஜ., கூட்டணி அமைத்து களமிறங்கின. தி.மு.க., - காங்., மற்றும் கம்யூ., கட்சிகள் தனித்து களம் கண்டன. பா.ஜ., கூட்டணியில் இருந்த தே.மு.தி.க., 25.42 சதவீத ஓட்டுக்களுடன், தி.மு.க., வேட்பாளரை பின்னுக்கு தள்ளி, இரண்டாமிடத்துக்கு முன்னேறியது.
மூன்றாவது தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ., இணைந்திருந்தது. தனித்து களமிறங்கிய அ.ம.மு.க., 43,816 (3.93) ஓட்டுக்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. திருப்பூர் தொகுதி உருவான பின், பா.ஜ., அதிக பலம் பொருந்திய கட்சியாக வளர்ந்துள்ளது என்கின்றனர்.
லோக்சபா தொகுதியின் வெற்றி வாய்ப்பை நிர்ணயிப்பதில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, இரண்டாவது முறையாக, களமிறங்கியுள்ள பா.ஜ., வேட்பாளர், தனது செல்வாக்கை நிலைநாட்ட எந்த மாதிரியாக முயற்சிகளை முன்னெடுக்கிறார் என்பது போகப்போக தெரியும்.

