/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தடைக்காலம் துவக்கம்: மீன் வரத்து குறையும்
/
தடைக்காலம் துவக்கம்: மீன் வரத்து குறையும்
ADDED : ஏப் 20, 2024 11:51 PM
திருப்பூர்;மீன் பிடி தடைகாலம் அமலாகியுள்ளதால், திருப்பூர், தென்னம்பாளையம் மீன்மார்க்கெட்டுக்கான இன்றைய மீன் வரத்து, குறையும் சூழல் உருவாகியுள்ளது.
தமிழகத்தில் கிழக்கு கடற்கரைக்கு உட்பட்ட பகுதியில், 15 முதல், ஜூன், 14 வரை, 61 நாட்கள் மீன்பிடி தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. விசைப்படகுகள் கடலுக்கு செல்லாது.
கடலோர மாவட்டங்களில் மீன்பிடிக்க மீனவர்கள் கடலுக்குள் செல்ல மாட்டார்கள். இதனால், திருப்பூர் தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டுக்கான, இன்றைய மீன் வரத்து குறையுமென மீன் வியாபாரிகள் தெரிவித்தனர்.
கடந்த, 7ம் தேதி சிவராத்திரி, மறுநாள் பங்குனி அமாவாசை, கோவில்களில் விசேஷம், கடந்த வாரம், 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு, சித்திரைக்கனி இதனால், 15 நாட்களாக மீன் விற்பனை மந்தமாகி உள்ளது. இந்நிலையில், இன்று (21ம் தேதி) மீன் விற்பனை சுறுசுறுப்பாக இருக்குமென மொத்த வியாபாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.
ஆனால், மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளதால், மீன் வரத்துக்கு ஏற்ப விலை நிர்ணயிக்கப்படுமென, மீன் வியாபாரிகள் தெரிவித்தனர்.

