ADDED : ஆக 11, 2024 11:57 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம் - திருப்பூர் ரோடு போக்குவரத்து நிறைந்தது. இந்த ரோட்டில் அருள்புரம், குங்குமபாளையம் பிரிவு, தண்ணீர் பந்தல் பகுதிகளில் போதிய விளக்கு வசதியின்றி, இரவு நேரங்களில், ரோடு இருள்மயமாக காணப்படுகிறது.
விபத்து அபாயம் ஒருபுறம் இருக்க, திருட்டு வழிப்பறி சம்பவங்கள் நடக்கவும் வாய்ப்புள்ளது. இது சமூக விரோதிகளுக்கு சாதகமாக உள்ளது. மேலும், போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் மிகுந்த அருள்புரம் பகுதியில், மையத்தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

