/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஏ.வி.பி., கல்லுாரியில் ஆண்டு விழா
/
ஏ.வி.பி., கல்லுாரியில் ஆண்டு விழா
ADDED : ஏப் 12, 2024 01:26 AM

திருப்பூர்:திருமுருகன்பூண்டியில் உள்ள ஏ.வி.பி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின், 'ஆனந்தம்' என்ற பெயரில் ஒன்பதாம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடந்தது.
ஏ.வி.பி., கல்வி குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் கதிரேசன் வரவேற்றார். கல்லுாரி ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர்களாக சின்னத்திரை பிரபலங்கள் அசார் மற்றும் சரவணகுமார் ஆகியோர் பங்கேற்றனர். ஏ.வி.பி., அறக்கட்டளை செயலாளர் லதா, பொருளாளர் பொன்னுதாய் அருள்ஜோதி பங்கேற்றனர்.
மேலும், அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு, நுாறு சதவீத வருகை பதிவு பெற்ற மாணவிகளுக்கு மற்றும் ஆண்டு விழா, விளையாட்டு போட்டிகளில் அசத்தியவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து கண்கவர் கலைநிகழ்ச்சி நடந்தது.

