/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறுக்கே பாய்ந்த தெருநாய் லாரி மோதி தம்பதி பலி
/
குறுக்கே பாய்ந்த தெருநாய் லாரி மோதி தம்பதி பலி
ADDED : செப் 26, 2024 03:00 AM

திருப்பூர்:திருப்பூர் அருகே தாராபுரம் ரோடு, கோவில்பாளையத்தைச் சேர்ந்தவர் மணி, 48. மனைவி கவிதா, 43. இந்த தம்பதிக்கு, இரண்டு மகன்கள் உள்ளனர். கணவர் பனியன் நிறுவனத்திலும், மனைவி மரக்கடையிலும் வேலை செய்தார். நேற்று காலை, வழக்கம்போல வேலைக்குச் செல்ல, வீட்டில் இருந்து புறப்பட்டு டூ - வீலரில் திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
பொல்லிகாளிபாளையம் அருகே, திடீரென குறுக்கே தெருநாய் ஒன்று பாய்ந்தது. உடனே, டூ - வீலரை கட்டுப்படுத்த முயன்றபோது, சாலையில் விழுந்தனர். அப்போது அவ்வழியாக வந்த லாரி, தம்பதி மீது ஏறி, இறங்கியது. திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்து இறந்தனர்.
நல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

