/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தென்னையில் சுருள் வெள்ளை ஈ தாக்குதலை தடுக்க எளிய தீர்வு
/
தென்னையில் சுருள் வெள்ளை ஈ தாக்குதலை தடுக்க எளிய தீர்வு
தென்னையில் சுருள் வெள்ளை ஈ தாக்குதலை தடுக்க எளிய தீர்வு
தென்னையில் சுருள் வெள்ளை ஈ தாக்குதலை தடுக்க எளிய தீர்வு
ADDED : மே 23, 2024 02:10 AM

உடுமலை:: வேளாண் பல்கலை இறுதி ஆண்டு மாணவர்கள், கிராம வேளாண் அனுபவ பயிற்சிக்காக, மடத்துக்குளம் வட்டாரத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதலிலிருந்து தென்னை மரங்களை காக்கும் எளிய முறை குறித்து, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது. கல்லுாரி மாணவர்கள், வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.
ரூகோஸ் வெளளை ஈ, தென்னை மரங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிக வெப்பநிலை, வெள்ளை ஈ போன்ற சாறு உறிஞ்சும் பூச்சிகளின் வளர்ச்சிக்கு சாதகமாக உள்ளது.
வெள்ளை ஈ தாக்கப்பட்ட தென்னை மரங்களின் இலைகளின் உட்பகுதியில் சுருள் சுருளாக நீள்வட்ட வடிவில் முட்டைகள் காணப்படும்.
இளங்குஞ்சுகள் மற்றும் முதிர்ச்சி அடைந்த வெள்ளை ஈக்கள் ஓலைகளின் அடிப்பாகத்தில் கூட்டமாக தங்கி, சாற்றை உறிஞ்சி மரத்தின் வளர்ச்சியை பாதிக்கும்.
இதற்கு விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்துகள் உபயோகிக்காமல், மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களாலான, ஒட்டுப் பொறிகளை மரத்தின் தண்டுப்பகுதியில், 6 அடி உயரத்தில் சுற்றி வெள்ளை ஈக்களை கவர்ந்து அழிக்கலாம்.
அதே போல், 15 நாட்களுக்கு ஒரு முறை இந்த தாள்களை துணியால் சுத்தமாக துடைத்த பின்பு ஒட்டும் பசையான விளக்கெண்ணையை பூசவேண்டும்.
இவ்வாறு செய்தால், தென்னை மரங்களை பரவலாக தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை குறைத்து, சேதங்களை தடுக்கலாம்.
இவ்வாறு, விளக்கம் அளித்தனர்.

