/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பார்' ஆக மாறிய 'பார்க்' கண்டு கொள்ளாத நகராட்சி
/
'பார்' ஆக மாறிய 'பார்க்' கண்டு கொள்ளாத நகராட்சி
ADDED : ஏப் 23, 2024 02:25 AM

உடுமலை;உடுமலையில், நகராட்சிக்கு சொந்தமான பூங்கா, அதிகாரிகள் அலட்சியம் காரணமாக மது அருந்தும் மையமாக மாற்றப்பட்டுள்ளது.
உடுமலையில், நுாற்றாண்டு பழமையான நகராட்சி அண்ணா பூங்கா உள்ளது. பராமரிப்பு இல்லாமல், சிதிலமடைந்து காணப்பட்ட, இந்த பூங்காவை புதுப்பிக்க, நகராட்சி நுாற்றாண்டு விழா சிறப்பு நிதியின் கீழ், இரு ஆண்டுக்கு முன் நிதி ஒதுக்கபட்டது.
தொடந்து பணிகள் முழுமையடையாமல், புதர் மண்டியும், விளையாட்டு உபகரணங்கள், பொழுது போக்கு அம்சங்களும் வீணாக உள்ளது. இதனை பராமரிப்பது மற்றும் பாதுகாப்பது குறித்தும், பணியை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடுவது குறித்தும் நகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.
அதோடு, ராஜேந்திரா ரோட்டிலுள்ள டாஸ்மாக் மதுக்கடை விற்பனை பாதிக்காத வகையில், பூங்கா எந்நேரமும் திறந்தே கிடக்கிறது.
இதனால், காலை முதல், நுாற்றுக்கணக்கான 'குடி' மகன்கள், நகராட்சி பூங்காவில் முகாமிட்டு, மது அருந்தும் மையமாக மாற்றியுள்ளனர்.
நகராட்சி பள்ளி, அரசு, தனியார் மருத்துவமனைகள், கடைகள் மற்றும் குடியிருப்புகள் என மக்கள் நெரிசல் மிகுந்த பகுதியிலுள்ள பூங்காவை பராமரிக்கவும், மது அருந்தும் மையாக உள்ளதை, மக்களுக்கு பயன்படும் பூங்காவாக பராமரிக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

