/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொப்பரை லாரியில் தீ பல லட்சம் ரூபாய் இழப்பு
/
கொப்பரை லாரியில் தீ பல லட்சம் ரூபாய் இழப்பு
ADDED : மே 23, 2024 04:25 AM

திருப்பூர்: காங்கயம் அருகே, தேங்காய் கொப்பரை லோடு ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்து நாசமானது.
காங்கயம் அருகேயுள்ள சிவியார்பாளையத்திலிருந்து தேங்காய் கொப்பரை லோடு ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்தது. லாரியை, ராசிபுரத்தைச் சேர்ந்த தர்மலிங்கம், 47, ஓட்டி வந்தார். இந்த லாரி பரஞ்சேர்வழி பகுதியில் நேற்று பகல் சென்ற போது, லாரியிலிருந்த தேங்காய் கொப்பரையில் திடீரென தீப்பிடித்தது.
லாரியை டிரைவர் ஓரமாக நிறுத்தி விட்டு இறங்கித் தப்பினார். தீ பரவியதில், கொப்பரை மற்றும் லாரியும் தீப்பற்றி எரியத் துவங்கியது. தகவல் அறிந்து காங்கயம் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் லாரியும், லாரியிலிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தேங்காய் கொப்பரையும் முற்றிலும் எரிந்து நாசமானது. காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

