ADDED : ஏப் 24, 2024 11:11 PM

காங்கயம் அருகே நத்தக்காடையூர் - கொன்னபாளையத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி, 60. தோட்டத்தில் செம்மறியாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை, மேய்ச்சல் முடிந்து, ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு வீட்டுக்குச் சென்றார்.
நேற்று காலை பார்த்த போது, ஆறு செம்மறியாடுகள் நாய்கள் கடித்து இறந்து கிடந்தன. நான்கு ஆடுகள், நாய்கள் கடித்ததில் காயம்பட்டிருந்தன.
விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் கூறுகையில், ''இப்பகுதியில் தெருநாய்கள் ஆடுகளை கொல்லும் சம்பவங்கள் தொடர்கதையாக நடக்கின்றன. கடைகளிலிருந்து வீசப்படும் கோழி இறைச்சி கழிவுகள், கோழிப்பண்ணைகளில் நோய்த்தாக்குதலால் இறக்கும் கோழிகளை பொது வெளியில் வீசுவது போன்றவை அதிகம் நடக்கிறது. இவற்றை சாப்பிட்டு ருசி கண்ட தெரு நாய்கள் பெருகி ஆடுகளை கடித்துக் கொல்கின்றன. அடிக்கடி நடக்கும்இப்பிரச்னைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்'' என்றனர்.

