/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
எம்ஜிஆர் ஆன நடிகர் அரவிந்தசாமி: அரவிந்தசாமியை மறைத்த எம்ஜிஆர்: அதிமுக.,வினர் செய்த ‛‛கூத்து''

UPDATED : ஜன 17, 2024 01:51 PM
ADDED : ஜன 17, 2024 12:50 PM

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க., வைத்த பிளக்ஸ் பேனரில், அவருக்கு பதில், அவர் வேடத்தில் நடித்த நடிகர் அரவிந்தசாமி புகைப்படம் இடம்பெற்றது கட்சியினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. சமூக வலைதளங்களில் புகைப்படம் வெளியானதால், அதன் மீது எம்ஜிஆர் புகைப்படத்தை ஒட்டி நிர்வாகிகள் மறைத்து சமாளித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மாதனூர் ஒன்றியம் மேற்கு மாவட்டம் சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.,-ன் 107வது பிறந்த நாள் விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கீழ்மிட்டாளம் கிளை கழகம் சார்பில் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டது.
அதில், எம்ஜிஆர் புகைப்படத்திற்கு பதிலாக, திரைப்படம் ஒன்றில் அவர் வேடத்தில் நடித்த நடிகர் அரவிந்தசாமி புகைப்படத்தை பிரிண்ட் செய்து வைத்துள்ளனர்.