/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
' எலைட்' பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைமுறை மாற்றம்: அதிக மதிப்பெண் பெற்றும் அனுமதி மறுப்பு
/
' எலைட்' பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைமுறை மாற்றம்: அதிக மதிப்பெண் பெற்றும் அனுமதி மறுப்பு
' எலைட்' பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைமுறை மாற்றம்: அதிக மதிப்பெண் பெற்றும் அனுமதி மறுப்பு
' எலைட்' பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைமுறை மாற்றம்: அதிக மதிப்பெண் பெற்றும் அனுமதி மறுப்பு
ADDED : மே 17, 2024 12:53 AM
திருப்புத்துார்:மாவட்ட அளவிலான அரசு ‛எலைட்' பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடைமுறை மாற்றப்பட்டதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநிலத்தில், 38 மாவட்டங்களிலும் தலா ஒரு மாதிரி பள்ளி எனும் 'எலைட்' பள்ளி, தங்கும் விடுதி வசதியுடன் கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை அருகே கீழக்கண்டனியில் இப்பள்ளி உள்ளது.
அரசு பள்ளிகளில் படிக்கும் அதிக மதிப்பெண் பெற்ற 10ம் வகுப்பு மாணவ-- - மாணவியரை பிளஸ் 1 வகுப்புக்கு தேர்வு செய்து, பள்ளி வகுப்புகளுடன், நீட், ஜே.இ.இ., போன்ற உயர்கல்விக்கான போட்டி தேர்வு பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
இவர்களுக்கான முழு செலவையும் அரசே ஏற்றுள்ளது. இங்கு பிளஸ் 1 சேர ஆண்டுதோறும் 200 மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அரசுப்பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண், இனவாரி ஒதுக்கீடு அடிப்படையில் மூன்று ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை நடந்தது.
காரைக்குடி ராமனாதன் அரசு பள்ளியில் 24 மாணவர்களும், தி.புதுப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் 15 மாணவர்களும் கடந்த ஆண்டில் பிளஸ் 1 வகுப்பில் சேர்க்கப்பட்டனர்.
ஆனால் இந்த ஆண்டு இந்த நடைமுறை மாற்றப்பட்டு ஒரு பள்ளிக்கு நான்கு பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் கூடுதல் மதிப்பெண் பெற்றும் ஒரே பள்ளி மாணவர்கள் அனுமதி பெற முடியாத நிலை உருவாக்கியுள்ளது.
தி.புதுப்பட்டி பள்ளியில் இந்தாண்டு 27 மாணவர்கள் 450க்கும் அதிகமாகவும், 73 பேர் 400க்கு அதிகமாகவும் பெற்றுள்ளனர். இவர்களுக்கு எலைட் பள்ளியில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இவர்களை விட குறைந்த மதிப்பெண் பெற்ற வேறு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதனால் நேற்று தி.புதுப்பட்டி அரசு பள்ளிக்கு மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் வந்து முற்றுகையிட்டு தங்கள் அதிருப்தியை வெளியிட்டனர்.
கடந்த ஆண்டுகளை போல மதிப்பெண் மற்றும் இனவாரி ஒதுக்கீடு அடிப்படையில் எலைட் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை நடத்த கோரியுள்ளனர்.

