/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
மாடு ஏற்றி சென்ற லாரியை மடக்கி பணம் பறிக்க முயன்றவர் கைது
/
மாடு ஏற்றி சென்ற லாரியை மடக்கி பணம் பறிக்க முயன்றவர் கைது
மாடு ஏற்றி சென்ற லாரியை மடக்கி பணம் பறிக்க முயன்றவர் கைது
மாடு ஏற்றி சென்ற லாரியை மடக்கி பணம் பறிக்க முயன்றவர் கைது
ADDED : ஆக 28, 2024 05:56 PM
திருப்பத்துார்: திருப்பத்துார் மாவட்டம், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஆந்திர மாநிலம், கடப்பாவில் இருந்து, பொள்ளாச்சிக்கு, 42 மாடுகளை ஏற்றிய கன்டெய்னர் லாரி சென்றது. நேற்று முன்தினம் இரவு லாரியை மடக்கிய ஒரு கும்பல், டிரைவர் செந்தில்குமாரிடம் பணம் கேட்டு மிரட்டியது.
டிரைவர், 100 எண்ணில் புகார் செய்தார். அம்பலுார் போலீசார் உடனடியாக சம்பவ இடம் சென்று, கன்டெய்னர் லாரி டிரைவரை மிரட்டி, பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்ட, இந்து மகா சபா முன்னாள் நிர்வாகி ஜெகன், அவரது நண்பர்கள் கார்த்திக், மணியரசு ஆகிய, 3 பேரை கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் மீது, பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.