/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
கோவில் தெப்பக்குளத்தை சுற்றி திடீர் பள்ளம் ஏற்பட்டதால் பீதி
/
கோவில் தெப்பக்குளத்தை சுற்றி திடீர் பள்ளம் ஏற்பட்டதால் பீதி
கோவில் தெப்பக்குளத்தை சுற்றி திடீர் பள்ளம் ஏற்பட்டதால் பீதி
கோவில் தெப்பக்குளத்தை சுற்றி திடீர் பள்ளம் ஏற்பட்டதால் பீதி
ADDED : டிச 12, 2025 04:22 AM

துாத்துக்குடி: சிவன் கோவில் தெப்பக்குளத்தை சுற்றி, இருபுறங்களில் திடீரென பள்ளம் ஏற்பட்டதால், மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
துாத்துக்குடி சிவன் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் நகரின் மையப்பகுதியில் உள்ளது. 150 ஆண்டுகள் பழமையான அந்த குளத்தை மாநகராட்சி சார்பில் துார்வாரி சுற்றுப்பகுதியில் பூங்கா அமைக்கும் பணி நடக்கிறது.
இதற்கிடையே, குளத்து நீரில் நச்சுத்தன்மை இருப்பதாக மீன்வளக் கல்லுாரி நிபுணர் குழுவினர் அறிக்கை கொடுத்ததால், சில நாட்களுக்கு முன் குளத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் பணி துவங்கியது.
இந்நிலையில், தெப்பக்குளத்தின் வடக்கு பகுதியில் சுற்றுச்சுவரை ஒட்டிய நடைபாதையில் நேற்று முன்தினம் இரவு, 50 அடி நீளத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டது.
தொடர்ந்து, நேற்று அதிகாலை தெற்கு பகுதியில் உள்ள சுற்றுச்சுவரை ஒட்டிய நடைபாதையில், 60 அடி நீளத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. அப்பகுதியில், 200 கிலோ வாட் திறன் டிரான்ஸ்பார்மர்கள் இருந்ததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.