/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி மாற்றுத்திறனாளி தற்கொலை மிரட்டல்
/
உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி மாற்றுத்திறனாளி தற்கொலை மிரட்டல்
உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி மாற்றுத்திறனாளி தற்கொலை மிரட்டல்
உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி மாற்றுத்திறனாளி தற்கொலை மிரட்டல்
ADDED : பிப் 06, 2025 11:36 PM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே கீழநம்பிபுரம் கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி, 33, மாற்றுத்திறனாளி ஆவார். சொந்தமாக தொழில் தொடங்குவதற்கு அரசு உதவ வேண்டும், சேதமடைந்த வீட்டை அரசு சரி செய்து தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனுக்கள் அளித்துள்ளார்.
இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாத நிலையில், விரக்தி அடைந்த முனியசாமி நேற்று என். வேடப்பட்டி கிராமத்தின் காட்டுப் பகுதியில் அமைந்துள்ள உயர் அழுத்த மின்சார டவரில் ஏறி அமர்ந்து கொண்டு தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறினார்.
அப்பகுதியை சேர்ந்தவர்கள் சங்கரலிங்கபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், தீயணைப்பு துறையினர், வருவாய் துறை அதிகாரிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட முனியசாமியிடம் நீண்ட நேரம் பேச்சு நடத்தினர்.
அவரை ஏணி மூலம் பத்திரமாக கீழே இறங்கச் செய்த அதிகாரிகள் குழுவினர் அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்தனர். பின்னர் விளாத்திகுளம் இன்ஸ்பெக்டர் சக்திவேல், எட்டையபுரம் தாசில்தார் சுபா ஆகியோர் முனியசாமியிடம், அவரது கோரிக்கை குறித்து கேட்டறிந்து மனுவாக அளிக்கும்படி கூறினர்.
மேலும், இதுபோன்ற செயல்களில் இனிமேல் ஈடுபடக்கூடாது என அவர்கள் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

