/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
ஐகோர்ட் நீதிபதி என 'உடான்ஸ்' கிறிஸ்தவ போதகருக்கு காப்பு
/
ஐகோர்ட் நீதிபதி என 'உடான்ஸ்' கிறிஸ்தவ போதகருக்கு காப்பு
ஐகோர்ட் நீதிபதி என 'உடான்ஸ்' கிறிஸ்தவ போதகருக்கு காப்பு
ஐகோர்ட் நீதிபதி என 'உடான்ஸ்' கிறிஸ்தவ போதகருக்கு காப்பு
ADDED : மே 23, 2024 02:30 AM

துாத்துக்குடி:துாத்துக்குடி எஸ்.பி.,யை சந்திக்க ஐகோர்ட் நீதிபதி என பொய் சொல்லி உள்ளே நுழைந்த நபரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
துாத்துக்குடி மாவட்ட எஸ்.பி., அலுவலகம் வழக்கம் போல இயங்கிக் கொண்டிருந்த நிலையில், 60 வயது மதிக்கத்தக்க நபர் காரில் வந்தார்.
மாவட்ட எஸ்.பி., பாலாஜி சரவணனின் கார் நிறுத்தும் இடத்தின் அருகே காரை நிறுத்திய அவர், வரவேற்பறைக்கு வேகமாக சென்றார்.
பின், அங்கிருந்த காவலர்களிடம், தன்னை மும்பை ஐகோர்ட் நீதிபதி என அறிமுகம் செய்து கொண்டார். ஒரு வழக்கு தொடர்பாக, எஸ்.பி., பாலாஜி சரவணனை சந்திக்க வேண்டும் என்று கூறினார். அவரது நடத்தையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. வரவேற்பறையில் இருந்த காவலர் மாரியம்மாள், அந்த நபரிடம் அடையாள அட்டையை கேட்டார். அவர் சமாளிக்க முயன்றார்.
இதையடுத்து அங்கிருந்த காவலர்கள் அவரிடம் முறைப்படி விசாரித்தனர். அப்போது அவர் நீதிபதி இல்லை என்பது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து, சிப்காட் காவல் நிலையத்துக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். விசாரணையில், அவர், சென்னை கொட்டிவாக்கம் கற்பகம் அம்பாள் நகரைச் சேர்ந்த பாஸ்கர், 57, என தெரிந்தது.
கிறிஸ்தவ மத போதகரான அவர், மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் குடும்ப பிரச்னை தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த அவர், அங்கு, போலீசாரிடம் ஐகோர்ட் நீதிபதி எனக் கூறி, 'எஸ்.பி.,யிடம் பேசி விட்டு வருகிறேன்' எனக் கூறி அங்கிருந்து வந்தார் என்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார் மேலும் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

