/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
சாத்தான்குளத்தில் தண்ணீர் கேட்டு குடங்களுடன் மக்கள் போராட்டம்
/
சாத்தான்குளத்தில் தண்ணீர் கேட்டு குடங்களுடன் மக்கள் போராட்டம்
சாத்தான்குளத்தில் தண்ணீர் கேட்டு குடங்களுடன் மக்கள் போராட்டம்
சாத்தான்குளத்தில் தண்ணீர் கேட்டு குடங்களுடன் மக்கள் போராட்டம்
ADDED : மே 17, 2024 12:50 AM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் டவுன் பஞ்சாயத்து பகுதியில், சில இடங்களில் சரியாக குடிநீர் வழங்கவில்லை என, புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், டவுன் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் பலமுறை அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும், நடவடிக்கை இல்லாததால், 50க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் நேற்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார், டவுன் பஞ்சாயத்து அதிகாரிகள் பேச்சு நடத்தி, தண்ணீர் சீராக வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின், போராட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்தனர்.
மக்கள் கூறியதாவது:
சாத்தான்குளம் டவுன் பஞ்சாயத்தில் 15 வார்டுகள் உள்ளன. ஒன்றாவது வார்டு பகுதிகளில் ஒரு மாதமாக குடிநீர் சரியாக வழங்கவில்லை எனக்கூறி அப்பகுதி மக்கள் கடந்த 1ல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டாவது வார்டு பகுதியிலும் 50 நாட்களுக்கும் மேலாக குடிநீர் சரிவர வழங்கவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டதால், மாற்று ஏற்பாடு செய்வதாக டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.