/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் மேற்கு தொடர்ச்சி மலை இருக்காது: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

ADDED : ஏப் 25, 2024 05:18 PM

தூத்துக்குடி: மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் மேற்கு தொடர்ச்சி மலை இருக்காது என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, தூத்துக்குடி விமான நிலையத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் என்றைக்கு தி.மு.க. ஆட்சி வந்ததோ அன்றிலிருந்து ரேஷன் அரிசி கடத்தல் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இன்னும் ஒரு முறை இவர்கள் ஆட்சிக்கு வந்து விட்டால், மேற்கு தொடர்ச்சி மலையே இருக்காது. கனிம வளங்கள் அனைத்தும் கொள்ளை போகிவிடும்.
திராவிட மாடல் அரசு
போதைப் பொருட்கள் புழக்கம் காரணமாக, தமிழக மக்கள் தங்கள் குழந்தைகள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி விடுவார்களோ என அச்சப்பட துவங்கி உள்ளனர். இதற்குக் காரணம் திராவிட மாடல் அரசு தான். மோடி மூன்றாவது முறையாக பிரதமராவதை 140 கோடி மக்களும் விரும்புகிறார்கள். நாளை நடைபெற உள்ள இரண்டாம் கட்ட தேர்தல் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக இருக்கும்.
தேசிய ஜனநாயக கூட்டணி
இண்டியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள் மக்கள் மத்தியில் பிரச்னைகளை உருவாக்கி வருகின்றனர். அனைத்து ஜாதியினரும், மதத்தினரும் சமமாக மதிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, இதுவரைக்கும் இல்லாத வெற்றி பெரும். இவ்வாறு அவர் கூறினார்.