/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
துாத்துக்குடியில் கடலோர காவல் படையினர் பாதுகாப்பு ஒத்திகை
/
துாத்துக்குடியில் கடலோர காவல் படையினர் பாதுகாப்பு ஒத்திகை
துாத்துக்குடியில் கடலோர காவல் படையினர் பாதுகாப்பு ஒத்திகை
துாத்துக்குடியில் கடலோர காவல் படையினர் பாதுகாப்பு ஒத்திகை
ADDED : மே 25, 2024 02:48 AM

துாத்துக்குடி:இந்திய கடலோர காவல் படையின் துாத்துக்குடி பிரிவு சார்பில், ஆண்டுதோறும் கடலுக்குள் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்துவது உண்டு. அதன்படி, துாத்துக்குடியில் இருந்து 13 கி.மீ. தொலைவில் கடலுக்குள் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடந்தது.
கடலோர காவல் படைக்கு சொந்தமான வைபவ், ஆதர்ஷ், அதுல்யா, வஜ்ரா, அபிராஜ் ஆகிய ஐந்து ரோந்து கப்பல்கள் ஒத்திகையில் ஈடுபட்டன.
கடலுக்குள் அணைக்க முடியாத அளவிற்கு திடீரென கப்பலில் தீ பற்றி கொண்டால் அதை எவ்வாறு கட்டுக்குள் கொண்டு வருவது, மாலுமிகளை பாதுகாப்பது என்பது குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
கார்னியர் ரக விமானத்தில் இருந்து கடலில் வீசப்படும் ரப்பர் படகு, நீரில் விழுந்ததும் பலூன் போல தண்ணீரில் மிதந்து தத்தளிக்க கூடியவர்களை மீட்பது குறித்தும் ஒத்திகை நடத்தப்பட்டது.