/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
திடீர் ஆசிரியையாக மாறிய 3ம் வகுப்பு மாணவி
/
திடீர் ஆசிரியையாக மாறிய 3ம் வகுப்பு மாணவி
ADDED : செப் 11, 2024 05:50 AM

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 1,250 பள்ளிகளில், ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவில்பட்டி புது ரோட்டில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் யாரும் நேற்று பணிக்கு வரவில்லை. இதனால், அங்கு மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் சக மாணவ - மாணவியருக்கு பாடம் எடுத்து அசத்தினார்.
'எண்ணும் எழுத்தும்' என்ற தலைப்பில் முந்தைய நாள் ஆசிரியை கரும்பலகையில் எழுதி வைத்திருந்த பாடத்தின் விளக்கத்தை அவர் சக மாணவ, மாணவியருக்கு விளக்கினார்.
ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், மூன்றாம் வகுப்பு மாணவி ஒருவர் திடீர் ஆசிரியராக மாறி வகுப்பில் பாடம் எடுத்தது, சிறப்பாக பேசப்படுகிறது.

