தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ சாத்தான்குளம் இன்ஸ்., பணியின் போது மரணம்

சாத்தான்குளம் இன்ஸ்., பணியின் போது மரணம்

சாத்தான்குளம் இன்ஸ்., பணியின் போது மரணம்


ADDED : ஜன 30, 2025 01:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2025 01:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

துாத்துக்குடி : துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜ், 58, நேற்று மாலை காவல் நிலையத்தில் பணியில் இருந்த போது, திடீரென நெஞ்சு வலிப்பதாக போலீசாரிடம் கூறினார். உடனே அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் கொண்டு செல்ல முயன்றனர். ஆனால், சிறிது நேரத்தில் ராஜ் மாரடைப்பால் உயிரிழந்தார்.

நெல்லை மாவட்டம், தேவர்குளம் பகுதியை சேர்ந்த ராஜ், கடந்த 10ம் தேதி சாத்தான்குளம் இன்ஸ்பெக்டராக ராஜ் பொறுப்பேற்று இருந்தார். டி.எஸ்.பி., பதவி உயர்வு பட்டியலில் இருந்த ராஜ் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவருக்கு துரைச்சி என்ற மனைவியும், மகளும் உள்ளனர். அவரது உடலுக்கு எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் மற்றும் காவல் துறையினர் அஞ்சலி செலுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us