
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாரூர்: மன்னார்குடி அருகே, டூ-வீலரில் சென்ற இருவர் மீது தனியார் பஸ் மோதியதில், பரிதாபமாக இறந்தனர்.
திருவாரூர் மாவட்டம், பைங்காநாடு பகுதியைச் சேர்ந்தவர், பெரமையன், 56. இவரின் உறவினர் சக்திவேல், 49. இருவரும், நேற்று முன்தினம் இரவு, டூ - வீலரில், மன்னார்குடி வந்துவிட்டு, பைங்காநாடு நோக்கி சென்று கொண்டிருந்தனர். டூ - வீலரை, சக்திவேல் ஓட்டியுள்ளார்.
பரவாக்கோட்டை ரிங் ரோட்டில் சென்ற போது, பட்டுக்கோட்டையில் இருந்து, மன்னார்குடி நோக்கிவந்த தனியார் பஸ், இவர்களின் டூ - வீலர் மீது மோதியதில், இருவரும் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த, மன்னார்குடி போலீசார், இருவரையும் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு, இருவரும் இறந்தனர். இதுகுறித்து, மன்னார்குடி போலீசார் வழக்கு பதிந்து, பஸ் டிரைவர் வீரராஜா என்பவரை, கைது செய்தனர்.

