/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரக்கோணம் லோக்சபா தொகுதியில் ஜெகத்ரட்சகன் சென்டிமென்ட் பலிக்குமா?
/
அரக்கோணம் லோக்சபா தொகுதியில் ஜெகத்ரட்சகன் சென்டிமென்ட் பலிக்குமா?
அரக்கோணம் லோக்சபா தொகுதியில் ஜெகத்ரட்சகன் சென்டிமென்ட் பலிக்குமா?
அரக்கோணம் லோக்சபா தொகுதியில் ஜெகத்ரட்சகன் சென்டிமென்ட் பலிக்குமா?
ADDED : மார் 20, 2024 09:25 PM
அரக்கோணம் லோக்சபா தொகுதியில், கடந்த 1999, 2009 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில், தி.மு.க., சார்பில் ஜெகத்ரட்சகன் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
இவர், ஒவ்வொரு முறையும், தனக்கு 'சீட்' மற்றும் பெயர் அறிவித்ததும், நேரடியாக அரக்கோணம் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட திருத்தணி சட்டசபை தொகுதியின் ஈசான மூலையான கரீம்பேடு நாததீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபடுவது வழக்கம்.
அதன்பின், அங்கிருந்து கட்சி மற்றும் கூட்டணி கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டுவார்.
இவ்வாறு மூன்று முறையும் ஜெகத்ரட்சகன் தனக்கு சீட் ஒதுக்கீடு செய்து வேட்பாளர் பெயர் அறிவித்ததும், ஈஸ்வரன் கோவிலுக்கு சென்று பூஜைகள் நடத்தியதால், மூன்று முறையும் வெற்றி பெற்றுள்ளார்.
அந்த பாணியில், நேற்று தி.மு.க., வேட்பாளராக ஜெகத்ரட்சகன் பெயர் அறிவித்ததும், அவர் நேராக அமைச்சர் காந்தி, திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலரும், திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுமான சந்திரன்.
முன்னாள் மாவட்ட பொறுப்பாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான திருத்தணி பூபதி ஆகியோருடன் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் கரீம்பேடு ஈஸ்வரன் கோவிலுக்கு சென்றார்.
அங்கு, நேற்று மாலை 4:00 மணிக்கு பூஜை நடத்தி, கட்சி நிர்வாகிகளுக்கு துண்டு, சால்வை அணிவித்து ஆதரவு திரட்டும் பணியை துவக்கியுள்ளார்.
'இந்த சென்டிமென்ட் பூஜை, தி.மு.க., வேட்பாளர் ஜெகத்ரட்சகனுக்கு கை கொடுக்குமா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்' என, கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
- -நமது நிருபர்- -

