/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குற்றங்களை தடுக்க திணறும் போலீசார் காலி பணியிடம் நிரப்புவது எப்போது?
/
குற்றங்களை தடுக்க திணறும் போலீசார் காலி பணியிடம் நிரப்புவது எப்போது?
குற்றங்களை தடுக்க திணறும் போலீசார் காலி பணியிடம் நிரப்புவது எப்போது?
குற்றங்களை தடுக்க திணறும் போலீசார் காலி பணியிடம் நிரப்புவது எப்போது?
ADDED : ஏப் 30, 2025 09:37 PM
திருவாலங்காடு:திருத்தணி சப் - -டிவிஷனில் திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு, கனகம்மாசத்திரம், திருவாலங்காடு ஆகிய காவல் நிலையங்கள் உள்ளன.
இவற்றில், திருவாலங்காடு காவல் நிலையத்திற்கு உட்பட்டு கனகம்மாசத்திரம், திருவாலங்காடு காவல் நிலையங்கள் உள்ளன. இங்கு, இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ராஜகோபால், ஜன., 30ம் தேதி டி.எஸ்.பி.,யாக பதவி உயர்வு பெற்று, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு சென்றார்.
அதன்பின், திருவாலங்காடு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியிடமாக உள்ளது. இதை, திருத்தணி மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மலர்விழி கூடுதலாக கவனித்து வருகிறார்.
கூடுதல் பொறுப்பால் கனகம்மாசத்திரம், திருவாலங்காடு, திருத்தணி மகளிர் ஆகிய மூன்று காவல் நிலையங்களில் நடக்கும் பணிகளை சரியாக கவனிக்க முடியாத நிலை உள்ளது. இதனால், மூன்று மாதங்களாக சாலை விபத்துக்கள், குற்றம், திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் திருவாலங்காடு, கனகம்மாசத்திரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அதிகம் நடந்து வருகிறது.
எனவே, இதை கட்டுப்படுத்த இன்ஸ்பெக்டர் காலி பணியிடத்தை நிரப்ப, திருவள்ளூர் எஸ்.பி., சீனிவாச பெருமாள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
தனிப்பிரிவு, ரைட்டர், கோர்ட், பாரா, ஜீப் டிரைவர், கம்யூட்டர் பிரிவு, கைதி பாதுகாப்பு, எஸ்.பி., அலுவலக பணி, ரோந்து பணி மற்றும் விடுப்பில் சென்றவர்கள் போக காவல் நிலையத்தில், 10 முதல் 15 பேர் பணியில் உள்ளனர். தற்போது, இன்ஸ்பெக்டர் இல்லை.
மேலும், இப்பகுதி ஆந்திர மாநில எல்லையில் உள்ளதால் அரிசி, கஞ்சா, குட்கா, கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்துவது அதிகம். இங்கு, இன்ஸ்பெக்டர் இல்லாததால், எஸ்.ஐ.,க்கள் குற்றங்களை தடுப்பதில் சிரமப்பட்டு வருகின்றனர்.
மேலும், யார் எங்கு பணி செய்வது என, தெரியாத சூழல் உள்ளது. எனவே, காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பணியிடத்தை விரைந்து நிரப்ப வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

