/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வேம்பேடில் குடிநீர் தட்டுப்பாடு கிராமவாசிகள் போராட்டம்
/
வேம்பேடில் குடிநீர் தட்டுப்பாடு கிராமவாசிகள் போராட்டம்
வேம்பேடில் குடிநீர் தட்டுப்பாடு கிராமவாசிகள் போராட்டம்
வேம்பேடில் குடிநீர் தட்டுப்பாடு கிராமவாசிகள் போராட்டம்
ADDED : மார் 19, 2024 07:14 AM

பொன்னேரி: பொன்னேரி அடுத்த ஆவூர் ஊராட்சிக்கு உட்பட்ட வேம்பேடு கிராமத்தில் கடந்த சில நாட்களாக சீரான குடிநீர் வினியோகம் இல்லை எனக்கூறி நேற்று, கிராமவாசிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னேரி - கோளூர் மாநில நெடுஞ்சாலையில், காலிக்குடங்களுடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரமாக போராட்டம் நடைபெற்ற நிலையில், அதிகாரிகள் யாரும் வராததால் அவ்வழியாக சென்ற அரசு பேருந்துகளை சிறை பிடித்தனர்.
தகவல் அறிந்த திருப்பாலைவனம் போலீசார் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர்.
கிராமத்தில் குடிநீர் மட்டுமின்றி, சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட வசதிகளும் சரிவர மேற்கொள்ளப்படுவதில்லை என அதிருப்தியுடன் தெரிவித்தனர்.
குழாய் உடைப்பு காரணமாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அதை உடனடியாக சரிசெய்து சீரமைப்பதாகவும் ஊராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், சாலை, தெருவிளக்கு வசதிகளையும் சரிசெய்து தருவதாக உறுதியளிக்கப்பட்டது. அதையடுத்த கிராமவாசிகள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

