/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வீரராகவர் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்
/
வீரராகவர் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்
வீரராகவர் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்
வீரராகவர் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்
ADDED : பிப் 05, 2024 05:50 AM
திருவள்ளூர் : திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் தை பிரம்மோற்சவம் நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் தை அமாவாசை அன்று சாலிஹோத்ர மகரிஷிக்கு வீரராகவர் காட்சி அளித்த தினம் என்பதால் தை பிரம்மோற்சவம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான தை பிரம்மோற்சவம், நேற்று அதிகாலை, 5:30 மணியளவில் கொடியேற்றத்துடன் துவங்கியது.
முதல் நாளான நேற்று, 7:00 மணியளவில், பூதேவி, ஸ்ரீதேவி சமேத உற்சவர் வீரராகவர், தங்க சப்பரத்திலும், இரவு சிம்மவாகனத்திலும் திருவீதி உலா வந்தார். பிரம்மோற்சவம் வரும் 13ம் தேதியுடன் நிறைவடைகிறது. தினமும் காலை, மாலை இரு வேளையிலும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதியுலா வந்து அருள்பாலிப்பார்.
பிரம்மோற்சவ உற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளின் ஒன்றான, கருடசேவை நாளை காலை நடக்கிறது.