/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழவேற்காடில் சுனாமி தினம் அனுசரிப்பு
/
பழவேற்காடில் சுனாமி தினம் அனுசரிப்பு
ADDED : டிச 27, 2025 06:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழவேற்காடு: கடந்த 2004, டிச., 26ல் ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலையில் சிக்கி ஏராளமானவர்கள் உயிரிழந்தனர். பழவேற்காடு மீனவ கிராமங்களிலும், மீனவ மக்கள் பாதிப்பிற்கு உள்ளாகினர்.
ஒவ்வொரு ஆண்டும், டிச., 26 கருப்பு தினமாக கருதி, மீனவர்கள் தொழிலுக்கு செல்வதை தவிர்த்து, சுனாமி ஆழிப்பேரலையில் உயிர்நீத்தவர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நேற்று பழவேற்காடில், 21ம் ஆண்டு சுனாமி தினம் அனுசரிக்கப்பட்டது.

