/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஜென்ம தோஷம் தீர்க்கும் குளம் 5 ஆண்டாக பராமரிக்காத அவலம்
/
ஜென்ம தோஷம் தீர்க்கும் குளம் 5 ஆண்டாக பராமரிக்காத அவலம்
ஜென்ம தோஷம் தீர்க்கும் குளம் 5 ஆண்டாக பராமரிக்காத அவலம்
ஜென்ம தோஷம் தீர்க்கும் குளம் 5 ஆண்டாக பராமரிக்காத அவலம்
ADDED : செப் 19, 2024 01:26 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் பழையனூர் கிராமத்தில் கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், 1,500 ஆண்டுகள் பழமையானது.
வரலாற்று சிறப்புமிக்க திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் தோன்ற காரணமான கோவில் என, போற்றி புகழக்கூடிய தலமாக விளங்குகிறது.
இதனால், வடாரண்யேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி உத்திரத்தின் போது, கொடியேற்றத்தின் முதல் நாள் புற்றுமண் எடுத்தல் நிகழ்வு இக்கோவிலில் நடைபெற்று, பின் வடாரண்யேஸ்வரர் கோவில் யாகசாலைக்கு அனுப்பப்படும்.
அதன்பின், அங்கு வைத்து, 10 நாட்கள் பூஜை செய்யப்பட்டு, தீர்த்தவாரியன்று முக்தி தீர்த்தத்தில் கரைக்கப்படும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலின் தென்புறத்தில், 2 ஏக்கர் பரப்பளவில் திருக்குளம் அமைந்துள்ளது. இதில், நீராடினால் ஜென்ம தோஷம் தீரும் என்பது ஐதீகம். இக்குளத்தில் பக்தர்கள் நீராடி செல்வர்.
ஆனால், ஐந்து ஆண்டுகளாக இக்குளம் பராமரிக்கப்படவில்லை. இதனால், தற்போது பாழடைந்து நீர் அசுத்தமாக மாறியுள்ளது. மேலும், திறந்தநிலையில் உள்ளதால், கால்நடைகள் அசுத்தம் செய்து வருகிறது.
எனவே, பழமையான கைலாசநாதர் கோவிலின் குளத்தை சீரமைக்க, ஹிந்து அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

