/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மேம்பாலம், மழைநீர் கால்வாய் பணி துவக்கம் நான்கு மாதத்தில் முடிக்க இலக்கு
/
மேம்பாலம், மழைநீர் கால்வாய் பணி துவக்கம் நான்கு மாதத்தில் முடிக்க இலக்கு
மேம்பாலம், மழைநீர் கால்வாய் பணி துவக்கம் நான்கு மாதத்தில் முடிக்க இலக்கு
மேம்பாலம், மழைநீர் கால்வாய் பணி துவக்கம் நான்கு மாதத்தில் முடிக்க இலக்கு
ADDED : பிப் 19, 2024 06:28 AM

கடம்பத்துார்: திருப்பாச்சூர் - கொண்டஞ்சேரி நெடுஞ்சாலையில் கூவம் ஏரி தரைப்பாலம் 2.50 கோடியில் மேம்பாலம் பணி விரைவில் துவங்க உள்ளது. மேலும் கடம்பத்துாரில் வெண்மனம்புதுார், கசவநல்லாத்துார் ஏரி வரை 4.20 கோடி ரூபாய் மழைநீர் கால்வாய் பணி துவங்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம் கூவம் ஊராட்சி கூவம் ஏரியிலிருந்து வெளியேறும் நீர் கொண்டஞ்சேரி வழியாக சத்தரை பகுதியில் கூவம் ஆற்றில் கலக்கிறது.
இதில் கொண்டஞ்சேரி பகுதியில் கூவம் ஏரிநீர் வரும் பகுதியில் உள்ள தரைப்பாலம் நீர் அதிகமாக வரும்போது போக்குவரத்து பாதிக்கப்படும்.
இதனால் 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பகுதிவாசிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டுமென கிராமவாசிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டுமென அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பினர்.
இதையடுத்து தமிழக அரசு இப்பகுதியில் 2.50 கோடி ரூபாய் மதிப்பில் 30 மீட்டர் நீளம், 10.5 மீட்டர் அகலத்தில் நான்கு பில்லர்களுடன் மேம்பாலம் கட்ட உத்தரவிட்டுஉள்ளது.
இதேபோல் கடம்பத்துார் பகுதியில் 2.8 கி.மீ, துாரத்திற்கு 1,300 மீட்டர் நீளத்தில் 4.20 கோடி மதிப்பில் மழைநீர் கால்வாய் மற்றும் 2 சிறுபாலங்கள் அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது.
மழைநீர் கால்வாய் பணிக்காக நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்ற சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களுக்கு எச்சரிக்கை கடிதம் வழங்கப்பட்டு பணி துவங்கப்பட்டுள்ளது.
இந்த மழைநீர் கால்வாய் கடம்பத்துார் ஊராட்சியில் உள்ள கசவநல்லாத்துார் மற்றும் வெண்மனம்புதுார் ஏரியில் நீர் சேகரமாகும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
மேலும் கூவம் ஏரிநீர் வரும் பகுதியில் விரைவில் மாற்றுப்பாதை அமைக்கப்பட்டு மேம்பாலம் துவங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
கடம்பத்துாரில் 6.70 கோடியில் மேம்பாலம் மற்றும் மழைநீர் கால்வாய் பணிகளை நான்கு மாதத்தில் நிறைவேற்றும் வகையில் திட்டமிட்டு பணிகளை துவக்கியுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

