/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தெருவில் பாய்ந்து குளத்தை நிரப்பும் வெள்ளம் ஆபத்தை உணராத கொடிவலசா சிறுவர்கள்

ADDED : டிச 29, 2024 02:59 AM

பள்ளிப்பட்டு, பள்ளிப்பட்டு ஒன்றியம், கொடிவலசா ஊராட்சிக்கு உட்பட்ட சுந்தரேசன் நகரில், சுந்தரேசனார் கோவில் அமைந்துள்ளது. கோவிலின் தெற்கு பகுதியில் கோவில் குளம் உள்ளது.
குளக்கரையை சுற்றிலும் குடியிருப்புகள் மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளி, துணை சுகாதார வளாகம் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இந்நிலையில், நகரின் மேற்கு பகுதியில் மலையில் இருந்து திரண்டு வரும் மழைநீர், வயல்வெளியை கடந்து, சுந்தரேச நகரை சூழந்துள்ளது. கோவில் சுற்றுச்சுவரை ஒட்டி பாயும் வெள்ளம், குளத்தை நிரப்பியுள்ளது.
உபரிநீர், பள்ளிப்பட்டு மாநில நெடுஞ்சாலையில் பாய்கிறது.
குளத்தில் பாயும் வெள்ளத்தில், மீன்கள் எதிர்நீச்சல் போட்டு துள்ளுகின்றன. இதை பார்த்து ரசிக்க சிறுவர்கள் திரண்டுள்ளனர்.
குளம் முழுதுமாக நீர் நிரம்பியுள்ள நிலையில், சிறுவர்கள் குளக்கரையில் வேடிக்கை பார்க்க குவிந்து வருவதால், பெற்றோர் அச்சத்தில் தவித்து வருகின்றனர்.
வெள்ளநீர் ஊருக்குள் பாய்வதை கட்டுப்படுத்தவும், குளத்திற்கு பாதுகாப்பு ஏற்படுத்தவும் சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.