/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தணிகாசலம்மன் கோவிலில் 11ல் தைப்பூசம் விழா
/
தணிகாசலம்மன் கோவிலில் 11ல் தைப்பூசம் விழா
ADDED : பிப் 04, 2025 07:33 PM
திருத்தணி:திருத்தணி அக்கைய்யநாயுடு சாலையில் உள்ள தணிகாசலம்மன் கோவிலில், இம்மாதம், 11ம் தேதி தைப்பூசம் விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
இதையொட்டி, காலை 7:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு, 108 பால்குட ஊர்வலம் மற்றும் பாலாபிஷேகம் நடைபெறும். அதை தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறும்.
மாலை 6:30 மணி முதல், இரவு 8:30 மணி வரை பவுர்ணமியையொட்டி, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் சேவையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
அதே போல, திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனை எதிரே உள்ள, வள்ளலார் கோவிலில், 11ம் தேதி தைப்பூசத்தையொட்டி, கொடியேற்றம், ஏழு திரை அகற்றி சிறப்பு தரிசனம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து ஆன்மிக சொற்பொழிவும், பஜனை குழுவினர் பக்தி பாடல்கள் பாடப்படும்.