/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தொழில் முனைவோருக்கு இன்று சிறப்பு நேர்காணல்
/
தொழில் முனைவோருக்கு இன்று சிறப்பு நேர்காணல்
ADDED : டிச 18, 2024 08:30 PM
திருவள்ளூர்:கலைஞர் கைவினைஞர் திட்டத்தில் தொழில் முனைவோருக்கு இன்று நேர்காணல் நடக்கிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழக அரசு, கலைஞர் கைவினை திட்டத்தின் கீழ், தொழில் தொடங்கவும் தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் திறன் மேம்பாட்டிற்கான சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் புதிதாகத் தொழில் தொடங்க ஆர்வமுள்ளோருக்கு, வட்டி மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் பயன் பெற msmeonline.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டத்தில், தொழில் ஆர்வம் கொண்டவர்கள், இத்திட்டம் பற்றிய கூடுதல் விபரம் மற்றும் விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டுதல் பெற, மாவட்ட தொழில் மையம், காக்களூர் தொழிற்பேட்டை, திருவள்ளூர் என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது 044 -27666787 ஆகிய அலைபேசி எண்ணில் அணுகலாம்.
மேலும், இன்று, காலை 10:30 மணிக்கு இத்திட்டம் தொடர்பாக சிறப்பு நேர்காணல் மாவட்ட தொழில் மையத்தில் நடக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

