/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருப்பாச்சூரில் அனுமதி பெறாத செங்கல் சூளையால் புகைமூட்டம்
/
திருப்பாச்சூரில் அனுமதி பெறாத செங்கல் சூளையால் புகைமூட்டம்
திருப்பாச்சூரில் அனுமதி பெறாத செங்கல் சூளையால் புகைமூட்டம்
திருப்பாச்சூரில் அனுமதி பெறாத செங்கல் சூளையால் புகைமூட்டம்
ADDED : மார் 13, 2024 09:55 PM

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்கு உட்பட்டது, கொண்டஞ்சேரி ஊராட்சி. இங்குள்ள திருப்பாச்சூர் - கொண்டஞ்சேரி நெடுஞ்சாலையில், தினமும் 10,000த்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இப்பகுதியில் சாலையோரம் உள்ள அரசு மற்றும் தனியார் நிலங்களில் அனுமதியின்றி செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. இந்த சூளையிலிருந்து வெளிவரும் புகையால், நெடுஞ்சாலை முழுதும் புகை மூட்டமாக மாறியுள்ளது.
இதனால், இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருவதோடு, மூச்சுத்திணறால் அவதிப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் விபத்தில் சிக்கும் நிலையும் ஏற்படுகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், ஊராட்சியில் அனுமதியின்றி இயங்கும் செங்கல் சூளையை கண்காணித்து, தடை விதிக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.