/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நந்திமங்களம் ஊராட்சியில் பள்ளி கட்டட பணி துவக்கம்
/
நந்திமங்களம் ஊராட்சியில் பள்ளி கட்டட பணி துவக்கம்
ADDED : நவ 20, 2024 01:46 AM

ஊத்துக்கோட்டை:பூண்டி ஒன்றியம், நந்திமங்களம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 50க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். இங்குள்ள வகுப்பறை கட்டடம், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.
இதனால், கட்டடத்தின் மேல் பகுதியில் சிமென்ட் காரை பெயர்ந்து, கீழே விழுந்தது. மழைக்காலங்களில் மழைநீர் கசிவதால், அதன் உறுதிதன்மை கேள்விக்குறியானது. இதை தொடர்ந்து, பள்ளி அருகே உள்ள ஒரு வீட்டை தற்காலிக பள்ளியாக ஊராட்சி நிர்வாகம் மாற்றியது.
இதுகுறித்து நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, குழந்தைகள் நேய உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ், இரண்டு வகுப்பறைகள் கட்டடம் கட்ட, 32 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த மாதம் 'டெண்டர்' விடப்பட்டு, தற்போது பணிகள் நடந்து வருகிறது.

