/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அதிக லாபம் தருவதாக ரூ.69 லட்சம் மோசடி
/
அதிக லாபம் தருவதாக ரூ.69 லட்சம் மோசடி
ADDED : செப் 09, 2025 10:52 PM
திருவள்ளூர்:கடம்பத்துார் ஒன்றியம் பேரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி, லீலாவதி ஆகிய இருவரிடமும், அதே பகுதியைச் சேர்ந்த மூன்று பேர், அதிக லாபம் தருவதாக கூறி, 69 லட்சம் ரூபாய் வாங்கி ஏமாற்றியதாக, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று, விஜயலட்சுமி மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
பேரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பாரிசா, கணவர் முகமது அபுபக்கர் மற்றும் மகன் ஜெபியு ல்லா ஆகியோர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், இதில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்குமெனவும் தெரிவித்தனர்.
இதை நம்பி, கடந்த 2024ம் ஆண்டு 53.30 லட்சம் ரூபாயை அளித்தேன். அதன்பின், அவ்வப்போது லாப தொகையை கொடுத்து வந்தனர். கடந்த 2025ம் ஆண்டு முதல் பணம் தராமல் ஏமாற்றி வந்தனர்.
பணத்தை திருப்பி கேட்டபோது, அதே பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பவர் மூலம் கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து, 2025 ஜூலை 7ம் தேதி மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தேன். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அ தேபோல், லீலாவதி என்பவரிடமும் அதிக லாபம் தருவதாக கூறி, 16 லட்சம் ரூபாய் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
எனவே, பணத்தை மீட்டுத்தர வேண்டும். மேலும், மோசடியில் ஈடுபட்ட நான்கு பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்ற ஏ.டி.எஸ்.பி., ஹரிகுமார், 'உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.