/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மதுக்கூடமாக மாறிய சாலை: பொதட்டூர்பேட்டையில் அவலம்
/
மதுக்கூடமாக மாறிய சாலை: பொதட்டூர்பேட்டையில் அவலம்
மதுக்கூடமாக மாறிய சாலை: பொதட்டூர்பேட்டையில் அவலம்
மதுக்கூடமாக மாறிய சாலை: பொதட்டூர்பேட்டையில் அவலம்
ADDED : டிச 22, 2025 05:18 AM

பொதட்டூர்பேட்டை: பொதட்டூர்பேட்டை யில் புறவழிச்சாலையை, மது பிரியர்கள் திறந்த வெளி மதுக்கூடமாக பயன்படுத்தி வருகின் றனர்.
பொதட்டூர்பேட்டை, வாணிவிலாசபுரம் கூட்டு சாலையில் இருந்து அத்திமாஞ்சேரிபேட்டை சாலைக்கு புறவழிச்சாலை வசதி உள்ளது.
பள்ளிப்பட்டில் இருந்து வரும் வாகனங்கள், பொதட்டூர்பேட்டைக்குள் நுழையாமல் அத்திமாஞ்சேரிபேட்டைக்கு செல்ல இந்த புறவழிசாலை பயன்பட்டு வந்தது.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன், இந்த சாலையின் ஒரு குறிப்பிட்ட பகுதி, தனிநபர் ஒருவரின் இடத்தில் அமைந்துள்ளதாக கூறி, சம்பந்தப்பட்ட நபர், அந்த இடத்தில் தடுப்பு ஏற்படுத்தி உள்ளார்.
இதனால், அந்த சாலையை வாகனங்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
புறவழிச்சாலையில், 100 அடி துாரம் மட்டும் தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதர சாலைப்பகுதியில் இரவு நேரத்தில் மது பிரியர்கள் அமர்ந்து மது அருந்துகின்றனர்.
இதனால், அந்த பகுதியில் ஏராளமான பிளாஸ்டிக் குப்பை மற்றும் காலி மது பாட்டில்கள் குவிந்துள்ளன.
புறவழிச்சாலையை பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதட்டூர்பேட்டை பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

