/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஊர் பெயர் மாற்றத்தால் குழப்பம் வடமதுரை பகுதிவாசிகள் போராட்டம்
/
ஊர் பெயர் மாற்றத்தால் குழப்பம் வடமதுரை பகுதிவாசிகள் போராட்டம்
ஊர் பெயர் மாற்றத்தால் குழப்பம் வடமதுரை பகுதிவாசிகள் போராட்டம்
ஊர் பெயர் மாற்றத்தால் குழப்பம் வடமதுரை பகுதிவாசிகள் போராட்டம்
ADDED : மார் 19, 2024 07:02 AM
ஊத்துக்கோட்டை: எல்லாபுரம் ஒன்றியம், வடமதுரை ஊராட்சியை, நிர்வாக வசதிக்காக, வருவாய்த் துறை பதிவேட்டில், வடமதுரை எ, பி, சி என்ற மூன்று பிரிவாக பிரித்து வைத்தனர். ஆனால், பயன்பாட்டில் பொதுமக்கள் வடமதுரை என அழைத்து வந்தனர்.
கடந்த, 2017ம் ஆண்டு வடமதுரை, எர்ணாங்குப்பம், செங்காத்தாகுளம் என மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
ஆனால், ஆதார், ரேஷன் கார்டு, பட்டா, சிட்டா உள்ளிட்ட அரசு வழங்கிய சான்றுகளில், பெயர் மாற்றம் செய்யப்படவில்லை. இதனால், மாணவர்களின் இருப்பிட சான்று, நிலங்கள் வாங்குவது, விற்பனை செய்வதில் சட்ட சிக்கல் ஏற்பட்டது.
இதனால் பொதுமக்கள், மாணவர்கள் கடும் அவதிப்பட்டனர். இக்குறையை தீர்க்க பழைய முறையில் வடமதுரை, எ,பி,சி., என வருவாய்த் துறை பதிவேட்டில் மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து கடந்த, 7 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கலெக்டர் முதல் தாசில்தார் வரை அனைவருக்கும் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று அங்குள்ள வி.ஏ.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் ஊத்துக்கோட்டை துணை தாசில்தார் ஞானசவுந்தரி மக்களிடம் பேச்சு நடத்தினர். இதில் பொதுமக்கள் வழங்கிய மனு பெற்றுக் கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவித்தனர்.
இதில் திருப்தியடைந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். ஒரு வார காலத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை எனில், வரும் லோக்சபா தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்தனர்.

