/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தனியார் கல்லூரி பேருந்து மோதி சுகாதார நிலைய கேட் உடைந்தது
/
தனியார் கல்லூரி பேருந்து மோதி சுகாதார நிலைய கேட் உடைந்தது
தனியார் கல்லூரி பேருந்து மோதி சுகாதார நிலைய கேட் உடைந்தது
தனியார் கல்லூரி பேருந்து மோதி சுகாதார நிலைய கேட் உடைந்தது
ADDED : ஏப் 08, 2025 12:12 AM

திருவாலங்காடு,
சென்னை --- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருத்தணி அருகே ஜி.ஆர்.டி., தனியார் பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரியில், திருவாலங்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இக்கல்லூரி பேருந்து, சாலையில் இருந்து திரும்பி செல்ல வசதியாக, நேற்று காலை 8:00 மணிக்கு, வழக்கம்போல திருவாலங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்திற்குள் சென்று திரும்பியது.
அப்போது, எதிர்பாராத விதமாக ஆரம்ப சுகாதார நிலைய நுழைவாயில் கேட் மீது பேருந்து உரசியது. இதில், தூண் சரிந்து கேட் விழுந்தது. இதில், நல்வாய்ப்பாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதுகுறித்து திருவாலங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.